திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேராளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இராமபிரானும், இலட்சுமணனும் தங்கள் தந்தை தசரதனுக்கும், சடாயுவுக்கும் திலதர்ப்பணம் செய்த தலம். திலம் என்றால் எள் என்று பொருள். ஆகையால் பிதுர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்கு உரிய தலம். |